ADDED : ஆக 03, 2026 06:05 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
வேப்பம்பாளையத்தில், தனியார் அமைப்பு சார்பில் நாட்டு மாடுகள்
கண்காட்சி நடந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து
விவசாயிகள், காங்கேயம், செவலை, காரி, மயிலை, பூச்சிக் காளை, வண்டி
மாடுகள் என பல்வேறு இனங்களை சேர்ந்த, 450க்கும் மேற்பட்ட மாடுகளை
கொண்டு வந்தனர். மாடுகளுக்கு, 20 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டு
பரிசும் வழங்கப்பட்டது. கண்காட்சியை பார்வையிட்ட பலர், கம்பீரமான
நாட்டு மாடுகளை ரசித்து, மொபைல்போனில் செல்பி எடுத்து கொண்டனர்.
