ADDED : ஆக 03, 2026 06:04 AM
சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தில்
ஏ.ஐ.டி. யு.சி., சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் ஐந்தாவது மாநாடு
நடந்தது. ஈரோடு மாவட்ட துணைத்தலைவர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமை
வகித்தார். மாணிக்கராஜ், சுந்தர்ராஜன், அன்னலட்சுமி, மாதேஷ்,
கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர்
சண்முகசுந்தரம் சிறப்புரையாற்றினார்.
தெருவோர வியாபாரிகள்
பாதுகாப்பு சங்கத்தின், 2014ம் ஆண்டு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற
வேண்டும். தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்கு வங்கி கடனை
விரைந்து தர வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகளில் சங்க கூட்டம் மாதம்
ஒரு முறை நடத்த வேண்டும்.
தெருவோர வியாபாரிகளுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட
நிர்வாக குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், கலை இலக்கிய பெருமன்றம்
திருப்பூர் குணா வாழ்த்தி பேசினர். நுாற்றுக்கும் மேற்பட்ட சாலையோர
வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
