ADDED : செப் 12, 2026 07:28 AM

சென்னிமலை:போலி ஆவணம் தயாரித்து சிம்கார்டு பெற்ற வழக்கில் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
சூரம்பட்டி நியூ டீச்சர்ஸ் காலனி, காவேரி சிட்டி பகுதியில் வசித்தவர்
கார்த்திக், 46; இவரின் மனைவி ராதிகா, 42; இருவரும் போலி ஆவணம் தயாரித்து
சிம் கார்டு வாங்கியது தொடர்பாக சென்னிமலை போலீசார்
வழக்குப்பதிந்து தேடி வந்தனர்.
இருவரையும் பெருந்துறை
ஆர்.எஸ்.ரோடு பகுதியில் நேற்று பிடித்தனர். அவர்களிடமிருந்து கார்,
போலி அடையாள அட்டை மற்றும் சிம் கார்டுகளை பறிமுதல் செய்து,
பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கார்த்திக்கை ஈரோடு
மாவட்ட சிறையிலும், ராதிகாவை கோவை பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.
இவர்கள் மீது ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு, கோவை குற்றப்பிரிவு,
சிங்காநல்லுார், மலையம்பாளையம், கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை
மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பண
மோசடி, ஆவண மோசடி மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பான ஏழு-க்கும்
மேற்பட்ட வழக்குகள்
நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் வழக்கில் தொடர்புடைய இவர்களது மகன் சக்தி தர்ஷன், 21, என்பவரை கடந்த ஆக.,28ம் தேதி
சென்னிமலை போலீசார் கைது செய்து
சிறையில் அடைத்தது
குறிப்பிடத்தக்கது.
