தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தோட்டக்கலை அதிகாரிகள் சென்னிமலையில் ஆய்வு

தோட்டக்கலை அதிகாரிகள் சென்னிமலையில் ஆய்வு

தோட்டக்கலை அதிகாரிகள் சென்னிமலையில் ஆய்வு


ADDED : செப் 12, 2026 07:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 07:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை,:சென்னிமலை அருகே புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த தம்பதி சந்திரசேகரன்-அமுதா. இவர்கள் நிரந்தர பந்தல் அமைத்து காய்கறி சாகுபடி மேற்கொண்ட அனுபவத்தின் மூலம் வருமான வாய்ப்புகளைப் பெற்றனர்.

இதையடுத்து சாகுபடி பரப்பை மேலும் விரிவு

படுத்தும் நோக்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையை அணுகினர். இதைத்தொடர்ந்து பிரதமரின் ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தில், 0.50 ஹெக்டேர் பரப்பளவில் நிரந்தர பந்தல் அமைக்க ஆணை வழங்கப்பட்டது.

அதன்படி தங்களது 0.50 ஹெக்டேர் நிலத்தில் நிரந்தர பந்தல் அமைக்கும் பணியை நிறைவு செய்தனர்.

அங்கு பீர்க்கன் மற்றும் புடலங்காய் விதைகளை விதைத்து சாகுபடி செய்து வருகின்றனர். சொட்டு நீர்ப்பாசனத்துடன் மூடாக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். இந்த பணியை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us