ADDED : ஆக 28, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே உக்கரத்தை சேர்ந்தவர் சின்ன கருப்பன், 60, கூலி தொழிலாளி; இவரின் மனைவி லட்சுமி, 50; இருவரும் உக்கரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றனர். கோபியை சேர்ந்த விக்கிகுமார், 30, ஓட்டி வந்த டி.வி.எஸ்., எக்சல் மொபெட் தம்பதி மீது மோதியது.
இதில் காயமடைந்த இருவரும், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லட்சுமி புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.