/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த மாடு காயம்
/
மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த மாடு காயம்
ADDED : மார் 05, 2026 06:45 AM
பள்ளிப்பாளையம்:ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியில் வாரந்தோறும் வியாழக்-கிழமை மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் மாடுகளை விற்ப-னைக்கு கொண்டு வருகின்றனர்.
அதேபோல் மாடு வாங்குவ-தற்கும் ஏராளமானோர் சந்தைக்கு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை ஒருவர் தன் காளை மாட்டை சரக்கு வாகனத்தில் சந்தைக்கு கொண்டு வந்தார். சந்தைக்கு வந்தவுடன் சரக்கு வாக-னத்தில் இருந்து காளை மாட்டை இறக்க முயன்றார். அப்போது மிரண்டு போன காளை மாடு, தலை தெறிக்க தாறுமாறாக ஓடி-யது.
அப்போது, பள்ளிப்பாளையம் காவிரி ஆற்று பாலம் வழியாக, பள்ளிப்பாளையம் மேம்பாலம் வரை தொடர்ந்து ஓடியது. மாட்-டுக்கு சொந்தக்காரரும் பின் தொடர்ந்து ஓடினார். இந்த மாடு, பள்ளிப்பாளையம் மேம்பாலத்தின் மேலே ஓடிக்கொண்டிருந்த-போது திடீரென, 15 அடி உயரத்திலிருந்து மாடு கீழே குதித்தது. இதில், மாட்டிற்கு சிறிய காயம் மட்டும் ஏற்பட்டது. பின், மாட்டின் உரிமையாளர்கள் விரைவாக வந்து மாட்டை மீட்டு, தண்ணீர் கொடுத்து மீண்டும் சரக்கு வாகனத்தில் ஏற்றி மாட்டு சந்தைக்கு கொண்டு சென்றார்.

