/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாட்டு வெடிகுண்டை கடித்த பசு படுகாயம்
/
நாட்டு வெடிகுண்டை கடித்த பசு படுகாயம்
ADDED : ஜூன் 01, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், தாளவாடி அருகே மெட்டல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் மல்லப்பன். இவருக்கு சொந்தமான பசு மாட்டை, அதே பகுதியில் நேற்று மாலை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அவுட்டுக்காய் எனப்படும் வெடியை கடித்ததால், மாட்டின் வாய்ப்பகுதி முழுவதும் சேதமானது. ரத்தம் சொட்ட வீட்டுக்கு வந்த பசுமாட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வேட்டையாடும் கும்பல் மான், காட்டுப்பன்றிகளை கொல்ல ஆங்காங்கே அவுட்டு காய்களை வீசி செல்வது வழக்கம். அந்த வகையில் வீசப்பட்ட அவுட்டுகாயை, பசுமாடு கடித்துள்ளது. இதுபோன்ற வெடிகளை வீசும் ஆசாமிகளை, வலைவீசி பிடிக்க வேண்டும் என்று, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.