/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உதயநிதி 49வது பிறந்தநாளையொட்டி மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டி
/
உதயநிதி 49வது பிறந்தநாளையொட்டி மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டி
உதயநிதி 49வது பிறந்தநாளையொட்டி மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டி
உதயநிதி 49வது பிறந்தநாளையொட்டி மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டி
ADDED : டிச 14, 2025 05:42 AM

ஈரோடு,: துணை முதல்வரும், தி.மு.க., இளைஞரணி மாநில செயலாளரு-மான உதயநிதி, 49வது பிறந்த நாளையொட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பாக மாற்றுத்திறனாளிகள் அமர்வு கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி துவங்கி வைத்தார். போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து எட்டு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்நிகழ்வில் எம்.எல்.ஏ., சந்திரகுமார், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், சூரம்பட்டி பகுதி செயலாளர் முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் மது கிருஷணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் முத்து-சாமி இன்று மாலை பரிசு வழங்குகிறார்.