/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி
/
மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி
ADDED : டிச 14, 2025 05:11 AM
ஈரோடு: தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்-னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் திருவிழா ஈரோடு, வில்லரசம்பட்டியில் நடந்தது. எம்.எல்.ஏ., சந்திரகுமார், துணை மேயர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி போட்டிகளை துவக்கி வைத்தார். மாநில அளவிலான போட்டியில், 8 அணியினர் பங்கேற்றுள்ளன.
போட்டியில், முதல் நான்கு இடங்களை பெறும் அணிக்கு முறையே, 20,000, 15,000, 10,000, 5,000 ரூபாய் பரிசாக வழங்-கப்படும் என்று, அமைச்சர் தெரிவித்தார். மேலும் ஈரோடு சிக்-கய்யா அரசு கலை அறிவியல் கல்லுாரியில், ஸ்டேடியம் அமைக்கும் பணிக்கு, மார்க்கிங் செய்து, பணிகள் துவங்கப்பட்-டுள்ளது. கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் சீர-மைப்பு பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு முதல் போக்குவ-ரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது, என்றார்.

