/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., சார்பில் கிரிக்கெட் போட்டி
/
தி.மு.க., சார்பில் கிரிக்கெட் போட்டி
ADDED : ஆக 20, 2025 01:20 AM
தாராபுரம், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, ஒன்றிய தி.மு.க., ஒன்றிய இளைஞரணி, அயலக அணி மற்றும் வி.பி.எம். ஹீரோஸ் பாய்ஸ் சார்பில், தாராபுரம் அருகே தொப்பம்பட்டி ஊராட்சி வரப்பாளையத்தில், திருப்பூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
வெற்றி பெற்ற முதல் மூன்று அணிகளுக்கு முறையே, 15 ஆயிரம், 10 ஆயிரம், 7,௦௦௦ ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையை, தாராபுரம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் செந்தில்குமார் வழங்கினார். வரப்பாளையம் விஸ்வநாதன், வேலங்காடு புதுார் சக்திவேல், நடராஜ், ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் கண்ணன், வரப்பாளையம் மகுடபதி, வேலங்காடு புதுார் வெங்கடேஷ் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.