/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கிரிக்கெட் போட்டி
/
வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கிரிக்கெட் போட்டி
ADDED : பிப் 17, 2025 02:35 AM
ஈரோடு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடந்தது.
மாவட்டத்தில் உள்ள இணைப்பு சங்கங்களின் உறுப்பினர்களை கொண்ட, 20 அணிகள் பங்கேற்றன. 48 ஆட்டம் நடந்தது. முத-லிடத்தை மாமரத்துப்பாளையம் அனைத்து வணிகர் சங்க அணி, இரண்டாமிடத்தை பெரியசேமூர் அனைத்து வியாபாரிகள் நல சங்கம் அணி, மூன்றாமிடத்தை காலிங்கராயன் அனைத்து வணிகர் சங்க அணி, நான்காமிடத்தை மூலப்பட்டறை அனைத்து வணிகர் சங்க அணி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ரியாஷ் அகமது, பிரேம்-குமார், தங்கராஜ், ஞானசேகர், தீபக், தமிழரசன் செய்திருந்-தனர்.