/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிரிக்கெட் வலைப்பயிற்சி திடல் அரசு மகளிர் கல்லுாரியில் திறப்பு
/
கிரிக்கெட் வலைப்பயிற்சி திடல் அரசு மகளிர் கல்லுாரியில் திறப்பு
கிரிக்கெட் வலைப்பயிற்சி திடல் அரசு மகளிர் கல்லுாரியில் திறப்பு
கிரிக்கெட் வலைப்பயிற்சி திடல் அரசு மகளிர் கல்லுாரியில் திறப்பு
ADDED : ஆக 15, 2025 03:29 AM
சேலம், சேலம், கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வலைப்பயிற்சி திடலை, அதன் முதல்வர் காந்திமதி, ரிப்பன் வெட்டி நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''தமிழக அரசு மகளிர் கலைக்கல்லுாரிகளில் கிரிக்கெட் விளையாட்டுக்கு வலைப்பயிற்சி திடல் உள்ள கல்லுாரி இதுதான்.
மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்க, இந்த திடல் திறக்கப்பட்டுள்ளது. மாணவியர் நல்ல முறையில் பயன்படுத்தி மாநில, தேசிய, சர்வதேச அளவில் வெற்றி பெற்று கல்லுாரிக்கு பெருமை சேர்க்க வேண்டும்,'' என்றார். உடற்கல்வி இயக்குனர் சிவக்குமார், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.