/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமராவதி ஆற்றில் முதலை? தாராபுரத்தில் மீண்டும் 'பரபர'
/
அமராவதி ஆற்றில் முதலை? தாராபுரத்தில் மீண்டும் 'பரபர'
அமராவதி ஆற்றில் முதலை? தாராபுரத்தில் மீண்டும் 'பரபர'
அமராவதி ஆற்றில் முதலை? தாராபுரத்தில் மீண்டும் 'பரபர'
ADDED : டிச 20, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: சமீபத்தில் பெய்த பரவலான மழை காரணமாக, அமராவதி அணையில் உபரி நீர் திறக்கப்பட்டதால், அமராவதி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்நிலையில் தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் ஆற்றுப்பாலம் அருகே, ஆற்றில் முதலை நீந்தியதாக தகவல் பரவியது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன், தாளக்கரை மற்றும் தாராபுரம் அமராவதி ஆற்று பகுதியில், முதலை நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது.
வனத்துறையினர் முயற்சித்தும் சிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் முதலை நடமாட்டம் உள்ளதாக தகவல் எழுந்துள்ளது. வனத்துறையினர் ஆய்வு செய்து, இம்முறையாவது முதலையை பிடிக்க வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது.