பயிர் சாகுபடி கணக்கெடுப்பு தன்னார்வலர்களுக்கு அழைப்பு
பயிர் சாகுபடி கணக்கெடுப்பு தன்னார்வலர்களுக்கு அழைப்பு
ADDED : செப் 16, 2026 06:40 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், அரசின் மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்கள், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை மின்னணு பயிர் சாகுபடி பரப்பு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இப்பணியில் வேளாண்மை - உழவர் நலத்துறை அலுவலர், தன்னார்வலர்கள் மேற்கொள்கின்றனர். நடப்பு தரிசு நிலப்பதிவுக்கு ஒரு உட்பிரிவுக்கு, 3 ரூபாய், முதன்மை பயிருக்கான ஒரு உட்பிரிவு எண்ணுக்கு, 5 ரூபாய், ஒரு கூடுதல் பயிருக்கு, 2 ரூபாய் என அதிகப்பட்சம், 9 ரூபாய் வரையும், மலைப்பகுதி கிராமங்களில் ஒரு உட்பிரிவுக்கு, 10 ரூபாய் வரை மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது.இப்பணி வரும், 20க்குள் நிறைவு செய்ய வேண்டி உள்ளதால், கூடுதல் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். ஆன்ட்ராய்டு மொபைல் பயன்படுத்த தெரிந்த விவசாயிகள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் அந்தந்த பகுதி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
