/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொங்கல் விடுமுறையால் பஸ் ஸ்டாண்டில் குவிந்த கூட்டம்
/
பொங்கல் விடுமுறையால் பஸ் ஸ்டாண்டில் குவிந்த கூட்டம்
பொங்கல் விடுமுறையால் பஸ் ஸ்டாண்டில் குவிந்த கூட்டம்
பொங்கல் விடுமுறையால் பஸ் ஸ்டாண்டில் குவிந்த கூட்டம்
ADDED : ஜன 13, 2024 03:48 AM
ஈரோடு,: பொங்கல் பண்டிகைக்காக இன்று முதல், 17ம் தேதி வரை ஐந்து நாட்கள் விடுமுறை வருகிறது.
இதனால் சொந்த ஊரில் பொங்கல் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.இவர்களுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் அனைத்து ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்டன. பஸ்களிலும் இருக்கைகள் நிரம்பிவிட்டன. இதனால் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க, நுாற்றுக்கணக்கான பயணிகள் குவிந்தனர். இதனால் அதிகாலை முதலே ரயில் நிலையத்தில் கூடள் கூட்டம் குவிய தொடங்கியது. இதனால் ஈரோடு வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை முதல், கூட்டம் அலைமோத தொடங்கியது. சிறப்பு பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.மாவட்டத்தில் பல்வேறு நிறுவனம், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பிற மாவட்ட தொழிலாளர்கள், பொங்கல் கொண்டாட, இன்று ஊருக்கு புறப்படுவர். இதனால் இன்றும் ரயில், பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.