/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
/
பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
ADDED : அக் 31, 2024 06:23 AM
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் நேற்று அலை-மோதியது.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகி-றது. நேற்று அரை நாள் விடுமுறை விடப்பட்-டதை பயன்படுத்தி, கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு நேற்று காலை முதலே, ரயில்களில் புறப்பட்டு செல்ல துவங்கினர். நேற்று முன்தினம் இரவு முதல் ரயில்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
அதேபோல், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நேற்று மதியம் முதல் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக மதுரை, சேலம், திருச்சி நகரங்களுக்கு அதிகளவு பயணிகள் சென்றனர். பஸ்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டாலும், தேவையான அளவுக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டன.