/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வி.இ.டி., கலை கல்லுாரியில் கலாசார திருவிழா யுகா-25
/
வி.இ.டி., கலை கல்லுாரியில் கலாசார திருவிழா யுகா-25
வி.இ.டி., கலை கல்லுாரியில் கலாசார திருவிழா யுகா-25
வி.இ.டி., கலை கல்லுாரியில் கலாசார திருவிழா யுகா-25
ADDED : மார் 03, 2025 07:35 AM
ஈரோடு; ஈரோடு வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் இருபாலர் கல்லுாரியில், கல்லுாரிகளுக்கு இடையிலான கலாசார திருவிழா யுகா-25 நடந்தது. வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். வேளாளர் கல்வி நிறுவன செயலாளர் சந்திரசேகர் தொடக்கவுரையாற்றினார்.
வி.இ.டி., கலை கல்லுாரி நிர்வாகி பாலசுப்ரமணியன், வேளாளர் கல்வி அறக்கட்டளை நிர்வாகி யுவராஜா, முதல்வர் நல்லசாமி, கல்லுாரி நிர்வாக அலுவலர் லோகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை மாளவிகா மோகனன் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.விழாவில் மருத்துவம், பொறியியல் மற்றும் கலை அறிவியல் பிரிவுகளில், 62 கல்லுாரிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பெருவாரியான போட்டிகளில் வெற்றிபெற்று கோவை அரசூர் கே.பி.ஆர்.கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது.