/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.20 லட்சம் மோசடியில் கைதான வாலிபரிடம் கஸ்டடி விசாரணை
/
ரூ.20 லட்சம் மோசடியில் கைதான வாலிபரிடம் கஸ்டடி விசாரணை
ரூ.20 லட்சம் மோசடியில் கைதான வாலிபரிடம் கஸ்டடி விசாரணை
ரூ.20 லட்சம் மோசடியில் கைதான வாலிபரிடம் கஸ்டடி விசாரணை
ADDED : மே 15, 2024 02:00 AM
ஈரோடு:அரசு வேலை வாங்கி தருவதாக, 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை, போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்தனர்.
ஈரோடு, மூலப்பாளையம், விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் மார்ட்டின், 37; கடந்த, 2019ல் கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ரிலிகேர் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றினார்.அதே நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்தவர் கோவை, வேடப்பட்டி பார்த்திபன், 38; இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பானது. இந்நிலையில் அரசு வேலை வாங்கி தருவதாக ராஜேஷ் மார்ட்டின் உள்ளிட்ட நான்கு பேரிடம் ரொக்கமாகவும், வங்கி கணக்கு மூலமாக, 20 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை; பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து ராஜேஷ் மார்ட்டின், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார்.
விசாரணை நடத்தியதில், பார்த்திபன் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதும், வேறொரு வழக்கில் கைதாகி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் அவரை, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார், ஒரு நாள் கஸ்டடி எடுத்து விசாரித்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சங்கீதா கூறியதாவது:மோசடி செய்த பணத்தை, பார்த்திபன் எதிலாவது முதலீடு செய்துள்ளாரா? என விசாரித்தோம். ஆனால், முழு பணத்தையும் செலவு செய்து விட்டதாக கூறியுள்ளார். ஏற்கனவே போலீசார் அவரின் வங்கி கணக்கை முடக்கியுள்ளனர். அவரிடம் பணம் இல்லாததால், ஈரோட்டில் கொடுத்த புகாரின் அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தயார் செய்து நீதிமன்றத்தில் வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

