/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவகிரி தம்பதி கொலையில் கஸ்டடி விசாரணை நிறைவு
/
சிவகிரி தம்பதி கொலையில் கஸ்டடி விசாரணை நிறைவு
ADDED : ஜூன் 20, 2025 12:58 AM
ஈரோடு, சிவகிரி முதிய தம்பதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம், ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில், போலீஸ் கஸ்டடி விசாரணை தொடர்ந்து ஆறு நாட்கள் நடந்தது.
நேற்று மாலையுடன் விசாரணை முடிந்த நிலையில், கொடுமுடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவர் பாண்டியராஜன் முன் நால்வரும் ஆஜர்படுத்தப்பட்டனர். வரும், 27ம் தேதி நால்வரையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து ஞானசேகரன், ஈரோடு மாவட்ட சிறையிலும், மற்ற மூவரும் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். சென்னிமலை இரட்டை கொலையில் தங்களுக்குடைய தொடர்பு குறித்து ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகிய மூவரிடமும், ஏ.டி.ஜி.பி.,யும் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் சென்னிமலை இரட்டை கொலை வழக்கு விசாரணையும் சூடுபிடிக்கும் என்று, போலீசார் தெரிவித்தனர்.