/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூட்டுறவு நகர வங்கிக்குள் நுழைய முடியாமல் வாடிக்கையாளர் அவதி
/
கூட்டுறவு நகர வங்கிக்குள் நுழைய முடியாமல் வாடிக்கையாளர் அவதி
கூட்டுறவு நகர வங்கிக்குள் நுழைய முடியாமல் வாடிக்கையாளர் அவதி
கூட்டுறவு நகர வங்கிக்குள் நுழைய முடியாமல் வாடிக்கையாளர் அவதி
ADDED : அக் 23, 2024 01:23 AM
கூட்டுறவு நகர வங்கிக்குள் நுழைய
முடியாமல் வாடிக்கையாளர் அவதி
கோபி, அக். 23-
கோபி பஸ் ஸ்டாண்ட் அருகே, கோபி கூட்டுறவு நகர வங்கி இயங்குகிறது. இங்கு தினமும் பல்வேறு சேவைகளுக்காக நுாற்றுக்கணக்கான வாடிக்கையாளர் வந்து செல்கின்றனர்.
முதல் தளத்தில் உள்ள வங்கி அலுவல் பிரிவில் இரும்பு கிரில் கேட் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், கேட்டை முழுவதும் திறக்க முடியாமல், குறுகலான இடைவெளிவிட்டு இரும்பு சங்கிலி கொண்டு இணைத்துள்ளனர். அந்த இடைவெளிக்குள் புகுந்து செல்ல மக்கள் அவதியுறுகின்றனர்.
குறிப்பாக உடல் பருமனமாக இருப்போர் அல்லது கையில் பை போன்ற பொருட்களுடன் செல்வோர் அவதிக்கு ஆளாகின்றனர். எளிதாக வங்கிக்குள் செல்ல வசதியாக, இரும்பு கிரில் கேட்டை போதிய இடைவெளி விட்டு திறந்து வைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.