/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மது குடிக்க பணம் தராததால் மனைவிக்கு அரிவாள் வெட்டு
/
மது குடிக்க பணம் தராததால் மனைவிக்கு அரிவாள் வெட்டு
மது குடிக்க பணம் தராததால் மனைவிக்கு அரிவாள் வெட்டு
மது குடிக்க பணம் தராததால் மனைவிக்கு அரிவாள் வெட்டு
ADDED : ஜூன் 01, 2024 06:36 AM
காங்கேயம் : வெள்ளகோவில் அருகே பாப்பம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி மனைவி லட்சுமி, 42; பாலசுப்பிரமணி குடிபோதை பழக்கத்துக்கு அடிமையானவர்.
மது குடிக்க பணம் கேட்டு, அடிக்கடி லட்சுமியிடம் தொந்தரவு செய்தார். இதனால் வடிவேல் நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு லட்சுமி சென்று விட்டார்.இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். தர மறுத்த லட்சுமியை, மறைத்தை வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். லட்சுமி தடுக்கவே வலது கை, வலது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதை தடுக்க வந்த லட்சுமியின் தங்கை வளர்மதிக்கும் இடது கை, இடுப்பில் வெட்டு விழுந்தது. இருவரும் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதுகுறித்த புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.