/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரிந்து வாழும் மனைவிக்கு அரிவாள் வெட்டு; பஸ் நிறுத்தத்தில் கணவன் வெறிச்செயல்

ADDED : மே 24, 2024 06:43 AM
பவானி : அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை கேட் பகுதியை சேர்ந்தவர் ராசாமணி, 45; கரும்பு வெட்டும் தொழிலாளி.
இவரின் கணவர் இருசகவுண்டர். குடும்ப தகராறால் இருவரும் ஓராண்டாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் குடிபோதையில் அவ்வப்போது, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக, கோனேரிப்பட்டி பிரிவில் பஸ் நிறுத்தத்தில் நின்ற ராசாமணியை, தகாத வார்த்தை பேசி இருசகவுண்டர் தாக்கியுள்ளார். அப்போது கரும்பு வெட்டும் கத்தியால், ராசாமணியை வெட்டியுள்ளார். இதை தடுக்கவே வலது கையில் வெட்டு விழுந்தது. இதனால் அரிவாளை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். பவானி அரசு மருத்துவமனையில் ராசாமணி சிகிச்சைக்கு சேர்ந்தார். அவர் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், இருசகவுண்டரை தேடி வருகின்றனர்.