ADDED : மே 09, 2024 06:23 AM
ஈரோடு : ஈரோடு மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் விடுத்துள்ள செய்தி குறிப்பு:ஆன்லைனில் வர்த்தகம், வேலை வாய்ப்பு, லோன் தருவது, கிரெடிட் கார்டு லிமிட் அதிகபடுத்தி தருவது, பான்-ஆதார் கார்டை வங்கி கணக்கில் சேர்ப்பது, தனது பெயரில் தவறான பார்சல் அனுப்பி இருப்பது, வங்கி ஏ.டி.எம்.
கார்டை புதுப்பித்தல், போலியான வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு கால் செய்வது, மலிவு விலையில் பொருட்கள் ஆன்லைனில் விற்பனை போன்ற எந்த வகையான சைபர் க்ரைம் குற்றங்களிலும் பணத்தை இழக்க வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறது. சமூக வலை தளங்களில் ஜிவ் அப் போன்று வரும் லிங்க்கை கிளிக் செய்து, யூசர் ஐ.டி மற்றும் ஓ.டி.பியை பகிர்வது, சமூக வலைதளங்களில் தனது போட்டோவை அனைவரும் பார்க்கும்படி பொதுவாக பகிர்வது போன்ற செயல்களை செய்ய வேண்டாம். ஆன்லைன் மோசடி மூலம் பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக அல்லது 24 மணி நேரத்துக்குள், சைபர் க்ரைம் உதவி எண்.1930 என்ற எண்ணிற்கு அல்லது www.cybercrime.gov.in என்ற வெப் சைட்டில் புகார் அளிக்கலாம்.இவ்வாறு கேட்டு கொண்டுள்ளனர்.