/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இருவரிடம் ரூ.1 கோடி மோசடி சைபர் கிரைம் போலீசார் வழக்கு
/
இருவரிடம் ரூ.1 கோடி மோசடி சைபர் கிரைம் போலீசார் வழக்கு
இருவரிடம் ரூ.1 கோடி மோசடி சைபர் கிரைம் போலீசார் வழக்கு
இருவரிடம் ரூ.1 கோடி மோசடி சைபர் கிரைம் போலீசார் வழக்கு
ADDED : ஆக 18, 2025 03:12 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் 46 புதுாரை சேர்ந்தவர் அசோக்குமார், 50; சமூக வலைதளத்தில் கிடைத்த தகவல் அடிப்படையில் பணத்தை இரட்டிப்பாக்கும் எண்ணத்தில் துவக்கத்தில், 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். பணம் திரும்ப கிடைக்கவே ஓரிருமுறை முதலீடு செய்த பணத்துக்கு அதிக தொகை கிடைத்தது. இதனால் ஜூன் முதல் ஆக.1 வரை, 29.௬௬ லட்சம ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால் இதற்குரிய பணம் திரும்ப கிடைக்கவில்லை. இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.
இதேபோல் சத்தியமங்கலம், கோணமூலையை சேர்ந்தவர் சரவணன், 55; சமூக வலைதளத்தில் டிரேடிங்கில் முதலீடு செய்தால் பணம் கிடைக்கும் என்று தகவல் வந்தது. இவரும், ௭௦.௭௦ லட்சம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்துள்ளார். இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின்படி, ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.