/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கள்ளத்தொடர்பால் வாலிபரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி வீசிய இருவர்
/
கள்ளத்தொடர்பால் வாலிபரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி வீசிய இருவர்
கள்ளத்தொடர்பால் வாலிபரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி வீசிய இருவர்
கள்ளத்தொடர்பால் வாலிபரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி வீசிய இருவர்
ADDED : ஆக 18, 2025 03:13 AM
பவானி: சித்தோட்டை அடுத்த ஆட்டையாம்பாளையம், பத்ரகாளியம்மன் கோவில் அருகே கீழ்பவானி கிளை வாய்க்காலில், வெள்ளை சாக்குப்பையில் நேற்று மதியம் ஆண் சடலம் மிதந்து வந்தது. துர்நாற்றம் வீசவே அப்பகுதி மக்கள், சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சாக்குபையை மீட்டு பார்க்கையில், 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்தது. வடமாநிலத்தவர் என்பதை மட்டும் உறுதி செய்து விசாரித்தனர். இது தொடர்பாக நெச்சிபாளையம் புதுாரில் இருவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் இறந்து போனவர் உ.பி., மாநிலத்தை சேர்ந்த முகமது பைசன், 22, என தெரிந்தது. போலீசில் சிக்கியது அதே பகுதியை சேர்ந்த முகமது நுார், 26, சுப்ரன், 18, என தெரிய வந்தது. இவர்கள் மூவரும் நெச்சிபாளையம் புதுாரில், ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி, துணியை அரைத்து நுாலாக செய்யும் வேலையில் கடந்த சில மாதமாக செய்கின்றனர். கடந்த, 12ம் தேதி மூவரும் மது அருந்தியுள்ளனர். முகமது பைசன், முகமது நுார் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்த ஆத்திரத்தில் இருவரும், போதை தலைக்கேறிய நிலையில் பைசனை பின்பக்கம் தலையில் கட்டையால் தாக்கி கொன்றுள்ளனர். சடலத்தை சாக்குப்பையில் கட்டி வாய்க்காலில் வீசியதாகவும் தெரிவித்தனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.