/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிலிண்டர்கள் வெடித்து 2 குடிசைகள் நாசம்
/
சிலிண்டர்கள் வெடித்து 2 குடிசைகள் நாசம்
ADDED : ஆக 05, 2025 01:19 AM
கோபி, கோபி அருகே தாழைக்கொம்புதுாரை சேர்ந்தவர் பூவேந்திரன், 35, கூலி தொழிலாளி. திருமணமாகி இரு மகன்களுடன், தென்னங்கீற்று ஓலையுடன் மேற்கூரையாக தகரம் வேய்ந்த குடிசை வீட்டில் வசிக்கிறார்.
வீட்டருகே பூவேந்திரனின் தாய் கந்தம்மாள், 60, அதேபோல் குடிசை வீட்டில் வசிக்கிறார். குடும்பத்துடன் பூவேந்திரன், அவரது தாய் நேற்று வெளியே சென்றிருந்தனர். மதியம், 2:45 மணிக்கு, இருவரின் வீட்டுக்குள் இருந்த காஸ் சிலிண்டர்களும் வெடித்து சிதறி வீடு தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.
ஆனாலும் குடிசை வீடு மட்டுமின்றி, தட்டுமுட்டு சாமான்கள் மற்றும் துணி என அனைத்தும் எரிந்து விட்டது. மின்கசிவால் தீ விபத்து நடந்திருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.