/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளி, கல்லுாரி திறப்பு வரை தினமும் தண்டவாள ரோந்து
/
பள்ளி, கல்லுாரி திறப்பு வரை தினமும் தண்டவாள ரோந்து
பள்ளி, கல்லுாரி திறப்பு வரை தினமும் தண்டவாள ரோந்து
பள்ளி, கல்லுாரி திறப்பு வரை தினமும் தண்டவாள ரோந்து
ADDED : மே 05, 2025 02:25 AM
ஈரோடு: சென்னை அருகே சில தினங்களுக்கு முன் ரயில் தண்டவாளத்தில் இருந்த நட், போல்ட்கள் கழற்றப்பட்டு இருந்தன. இதை தொடர்ந்து ஈரோடு ரயில்வே போலீசார் தண்டவாள பாதையில், ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியை தொடர்கின்றனர்.
இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் கூறியதாவது: பள்ளி, கல்லுாரிகளுக்கு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்-ளது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் விளையாட்டாக தண்டவாள பாதைக்கு வரக்கூடும். தண்டவாளத்தில் விரும்ப தகாத செயல்களில் ஈடுபடக்கூடும். எனவே பள்ளி, கல்லுாரி திறக்கும் வரை, ரயில்வே போலீசார் தொடர்ந்து தண்டவாள பாதையை கண்காணிக்க ரோந்து சுற்றி வர, போலீஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி தினமும் தண்டவாள பாதையை கண்காணிக்க ரோந்து சுற்றி வருகிறோம். இவ்வாறு கூறினர்.