/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடுப்பு கம்பிகள் சேதம் படித்துறையில் ஆபத்து
/
தடுப்பு கம்பிகள் சேதம் படித்துறையில் ஆபத்து
ADDED : டிச 25, 2025 04:48 AM
கோபி: பாரியூர் கோவில் படித்துறையில், தடுப்பு கம்பிகள் சேதமடைந்-ததால், பக்தர்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது.
கோபி அருகே, பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளி-யம்மன் கோவிலை ஒட்டி செல்லும் தடப்பள்ளி வாய்க்காலின் படித்துறை உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகளவில், கை, கால்களை கழுவுகின்றனர். மொத்தம் மூன்று இடங்களில் உள்ள படித்துறையின் கட்டமைப்பு அருகே இருந்த புங்கன்மரம், கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த பலத்த மழையால், வேருடன் சாய்ந்து தடுப்பு கம்பிகள் சேதமடைந்தது. அதன்பின் தடுப்பு கம்பிகளை கோவில் நிர்வாகம் சீரமைக்கவில்லை. திரு-விழா நெருங்கும் சூழலில், தடுப்பு கம்பி வசதியை ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

