/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் 141 வாகனங்கள் ரூ.34 லட்சத்துக்கு ஏலம்
/
ஈரோட்டில் 141 வாகனங்கள் ரூ.34 லட்சத்துக்கு ஏலம்
ADDED : டிச 25, 2025 04:49 AM

ஈரோடு: ஈரோட்டில் நடந்த பொது ஏலத்தில், 141 வாகனங்கள் ரூ.34 லட்சத்துக்கு ஏலம் போனது.
ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால், கஞ்சா வழக்-குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4 சக்கர வாகனங்கள் 11-, மூன்று சக்கர வாகனங்கள் 5ம், டூவீலர்கள் 129ம், மது வழக்குகளில் பறி-முதல் செய்யப்பட்ட 4 சக்கர வாகனங்கள் 4ம், டூவீலர்கள் 12ம் என மொத்தம், 161 வாகனங்கள் நேற்று ஈரோடு ஆணைக்கல்பா-ளையம் ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்பட்டது.
வாகனங்களை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்-டனர். ஏலம் எடுக்க வருபவர்கள் இருசக்கர வாகனத்துக்கு, 2,000, 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு 5,000 ரூபாய் செலுத்த அறிவு-றுத்தப்பட்டது. ஈரோடு எஸ்.பி., சுஜாதா தலைமையில் ஏ.டி.எஸ்.பி.,விவேகானந்தன் முன்னிலை யில், மதுவிலக்கு டி.எஸ்.பி., சுகுமார் ஏலத்தை நடத்தினார். 600க்கும் மேற்-பட்டோர் பங்கேற்றனர். 123 டூவீலர்கள், 5 மூன்று சக்கர வாக-னங்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம், 141 வாக-னங்கள் ஏலம் போனது. ஏலத் தொகை, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட-வற்றை சேர்த்து ரூ.34 லட்சத்துக்கு வாகனங்கள் ஏலம் போனது என போலீசார் தெரிவித்தனர்.

