/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொடர் மழையால் தக்காளி செடிகள் சேதம்
/
தொடர் மழையால் தக்காளி செடிகள் சேதம்
ADDED : மே 20, 2024 02:00 AM
அரூர்: அரூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், தக்காளி செடிகள் சேதமடைந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், நரிப்பள்ளி, கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், 1,300க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளியை, விவசாயிகள் நடவு செய்துள்ளனர். தற்போது, பெய்து வரும் தொடர் மழையால், தக்காளி செடிகள் அழுகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: கடந்தாண்டு ஒரு கூடை தக்காளி, 2,000 ரூபாய்க்கு மேல் விற்பனையானதால், அரூர் சுற்றுவட்டாரத்தில் விவசாயிகள் தக்காளியை ஆர்வத்துடன் நடவு செய்தனர். தற்போது, 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால், தக்காளி தோட்டத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், தக்காளி செடிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பூக்கள் மற்றும் காய்கள் மழையால் உதிர்ந்து, செடிகளிலுள்ள இலைகளும் அழுகி உள்ளது. மேலும், பழங்களும் வீணாகி வருகிறது. இதனால், தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து வரும் நிலையில், மழையால் செடிகள் அழுகி வருவதால், விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், கவலை அடைந்துள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

