/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டெம்பர் கிளாஸ்' ஒட்டுவதால் 'டேஞ்சர்' எஸ்.பி., ஆபீஸில் தீக்குளிப்பு முயற்சி
/
டெம்பர் கிளாஸ்' ஒட்டுவதால் 'டேஞ்சர்' எஸ்.பி., ஆபீஸில் தீக்குளிப்பு முயற்சி
டெம்பர் கிளாஸ்' ஒட்டுவதால் 'டேஞ்சர்' எஸ்.பி., ஆபீஸில் தீக்குளிப்பு முயற்சி
டெம்பர் கிளாஸ்' ஒட்டுவதால் 'டேஞ்சர்' எஸ்.பி., ஆபீஸில் தீக்குளிப்பு முயற்சி
ADDED : ஜூலை 16, 2025 01:18 AM
ஈரோடு, ஈரோட்டில் எஸ்.பி., அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோட்டை அடுத்த கஸ்பாபேட்டை, பாலிமேடு, சில்வர் சிட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார், 39; இவர் மனைவி சுகன்யா, 26;
தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனமாநகரின் பல்வேறு
பகுதிகளில் டூவீலரில் சென்று, மொபைல்போன்களுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்டும் தொழில் செய்கிறார்.ஈரோடு கடைவீதியில் டெம்பர் கிளாஸ் வாங்க
சென்றபோது தர மறுத்துள்ளனர். இதனால் வேதனை அடைந்தவர், மனைவி, குழந்தைகளுடன் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு நேற்று வந்தார். பையில் கேனில் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து மீட்டனர்.
இதுபற்றி செந்தில்குமார் கூறியதாவது: நான் குறைந்த விலையில் டெம்பர் கிளாஸ் ஒட்டுவதால், வியாபாரம் பாதிப்பதாக கூறும் சில கடைக்காரர்கள், டெம்பர் கிளாஸ் மொத்தமாக வாங்கும் இடத்தில் எனக்கு தரக்கூடாது என கூறியுள்ளனர். இதனால் எனக்கு தர மறுக்கின்றனர். மேலும் மொபைல் போன் கடைக்காரர்கள் என்னை மிரட்டுவது, அடிப்பது, பொருட்களை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் மீது பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. அதனால்தான் தீக்குளிக்க முயன்றேன். இவ்வாறு கூறினார். எஸ்.பி., சுஜாதாவிடம் போலீசார் அழைத்து சென்றனர். செந்தில்குமாரிடம் விபரம் கேட்டறிந்த நிலையில், டவுன் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.