/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூரில் சாலையில் திரியும் குதிரைகளால் ஆபத்து
/
அந்தியூரில் சாலையில் திரியும் குதிரைகளால் ஆபத்து
ADDED : செப் 04, 2025 01:54 AM
அந்தியூர், அந்தியூர், தவிட்டுப்பாளையத்தில் சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது.அந்தியூர், தவிட்டுப்பாளையம் ஆகிய இடங்களில், 20க்கும் மேற்பட்ட குதிரைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, சுற்றிக் கொண்டிருக்கும் குதிரைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகளும், இரு சக்கர வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. கடந்த ஆறு மாதத்தில் குதிரைகளால், கடி வாங்கியும், துரத்தி கீழே விழுந்தவர்களும் அதிகம். குறிப்பாக, பள்ளி மாணவர்கள்களை, துரத்தி கடிக்க செல்கிறது
. வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக திரியும் குதிரைகளை, வீட்டில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும். இல்லையெனில், உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.