/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களால் அபாயம்
/
அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களால் அபாயம்
ADDED : ஆக 11, 2025 08:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர்: பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில், 15க்கும் மேற்பட்ட காகித தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. தொழிற்சாலைகளுக்கு, புன்செய்புளியம்பட்டி வழியாக அட்டை பாரம் ஏற்றிய லாரிகள் அதிகம் செல்கின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, அதிக பாரத்துடனும், அதிவேகமாகவும் செல்கின்றன.
வளைவுகளில் திரும்பும் போது, அட்டைகள் சரிந்து விழும் சம்பவம் நடக்கிறது. ஏற்றப்படும் லோடுகள், லாரிகளின் அகலத்தை விட அதிகமாக இருப்பதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.