/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களால் வள்ளியாம்பாளையம் பிரிவில் ஆபத்து
/
சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களால் வள்ளியாம்பாளையம் பிரிவில் ஆபத்து
சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களால் வள்ளியாம்பாளையம் பிரிவில் ஆபத்து
சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களால் வள்ளியாம்பாளையம் பிரிவில் ஆபத்து
ADDED : ஆக 14, 2025 02:38 AM
கோபி, கோபி அருகே புதுவள்ளியாம்பாளையம் பிரிவு பகுதியில், சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோபி அருகே கரட்டடிபாளையத்தை கடந்து, பிரதான சத்தி சாலையில் உள்ள புதுவள்ளியாம்பாளையம் பிரிவின் குறுக்கே, சில மாதங்களுக்கு முன் சிறு பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டமைப்பு முடிந்த நிலையில், அப்பகுதியில் ஜல்லிக்கற்கள் பரவலாக சிதறி கிடக்கிறது. அதேசமயம் அவ்வழியே வாகன நடமாட்டம் அதிகம் என்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில், அவ்வழியே பயணிக்கும் வாகனங்கள், சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களால், நிலைதடுமாறி சறுக்கி விழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே நெடுஞ்சாலைத்துறையினர், சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.