/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தரமில்லாத நடைபாதையால் மாநகரில் விபத்து அபாயம்
/
தரமில்லாத நடைபாதையால் மாநகரில் விபத்து அபாயம்
ADDED : மே 03, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் ரவுண்டானாவில், மக்கள் சாலையை கடக்கும் வகையில், ஒரு மாதத்துக்கு முன் நெடுஞ்சாலைத்துறையினர் நடைபாதை அமைத்தனர்.ஆனால், இந்த நடைபாதை, தோசை கல்லிலிருந்து தோசையை பிரித்து எடுப்பதுபோல் ஏடு, ஏடாக பிரிந்து வருகிறது.
தரமின்றி அமைத்ததால் ஆங்காங்கே ஜல்லி பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே நடைபாதையை முழுவதுமாக அப்புறப்படுத்தி விட்டு, தரமாக அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.