சென்டர் மீடியன் தடுப்புகளின்றி கொளப்பலுார் சாலையில் ஆபத்து
சென்டர் மீடியன் தடுப்புகளின்றி கொளப்பலுார் சாலையில் ஆபத்து
ADDED : ஆக 16, 2026 06:18 AM

அ நிறம் | அளவு
கோபி:கோபி-கொளப்பலுார் சாலையில், அம்பிகை நகர் பிரிவு வரை, சென்டர் மீடியன் தடுப்பு
களின்றி, வாகன விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோபி
சிக்னலை கடந்து, கொளப்பலுார் சாலையில், பச்சைமலை பிரிவு பகுதியில்
மட்டும், பிரதான சாலையின் மத்தியில் சென்டர் மீடியன் தடுப்பு
வைக்கப்பட்டுள்ளது. அதை கடந்து பிரதான கொளப்பலுார் சாலையில்,
அம்பிகை நகர் பிரிவு வரை, சென்டர் மீடியன் தடுப்பு வைக்கப்படவில்லை.
இதனால் அசுர வேகத்தில், தாறுமாறாக பயணிக்கும் வாகனங்களால்,
அப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. தினமும் பீக் ஹவர்ஸ்
நேரங்களில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் போதிய
சென்டர் மீடியன் தடுப்புகள் நிறுவ, வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
