'பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்'
'பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்'
ADDED : ஆக 16, 2026 06:18 AM

சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாண்டியாறு-மோயாறு இணைப்பு
திட்டத்தை செயல்படுத்தக்கோரி சத்தியமங்கலம், தாளவாடி, கடம்பூர்,
பவானிசாகர், ஆகிய பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
இதில்
கலந்து கொண்ட இந்திய கம்யூ., முன்னாள் மாநில செயலாளரும், மூத்த
நிர்வாகியுமான முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது -
ஒரே
நாடு, ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்பதற்கான சூழ்ச்சியை செய்கின்றனர்.
வேலையின்மை பிரச்னை தலை துாக்கி வருகிறது. மக்கள் எதிர்பார்த்த
அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாதது எதார்த்தம். ஒரு சில அறிவிப்பு
வரவேற்கத்தக்கது. திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம்,
பட்டு புடவை வழங்கப்படும் என கூறியுள்ளனர். ஆனால்
எத்தனை பேருக்கு கொடுப்பார்கள் என தெரியவில்லை.
பெண்களுக்கு
மாதம் தோறும், 2,500 ரூபாய், அனைத்து பஸ்களிலும் இலவசமாக பயணம்
செய்யலாம் என அறிவித்தனர். இது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. மானிய
கோரிக்கையில் தேர்தல் அறிவிப்புகளை அறிவிப்பார்கள் என
எதிர்பார்க்கின்றனர். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும்
விஷயத்தில், மத்திய அரசின் நிலைபாடு என்ன என்று கூற முடியுமா.
பாண்டியாறு-மோயாறு
இணைப்பு திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். பவானி, அம்மாபேட்டை,
அந்தியூர் ஆகிய பகுதிகளில் எத்தனால் ஆலைகளால் மண்ணும், நீரும்
பாதிக்கப்படுகிறது. எனவே மக்கள். விவசாயிகளின் பிரச்னைகளை
மத்திய, மாநில அரசுகள் விரைந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
