ADDED : அக் 06, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில், கம்பத்ராயன் கிரி மலை உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் செங்குத்தான மலையில் உள்ள கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டும் பூஜை நடக்கும். இதற்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி உண்டு.
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கடம்பூர் வழியாக செங்குத்தான மூன்று மலைகளை கடந்து கோவிலுக்கு சென்றனர். சோதனைக்குப் பிறகே வனத்துறையினர் பக்தர்களை அனுமதித்தனர். கோவிலில் வேல் கம்பு நட்டு, பக்தர்கள் வழிபாடு செய்தனர். உள்ளூர் மக்கள் மட்டும் இரவில் தங்கி கொடிமரத்தில் தீபமேற்றி வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.