ADDED : அக் 31, 2026 06:50 AM
அ நிறம் | அளவு
கோபி:நாமக்கல்
மாவட்டம் வெப்படையை சேர்ந்தவர், தீபிகா, 22; இவரின் கணவர் பிரபாகரன்.
கோபி அருகே வாணிப்புத்துாரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு கடந்த, 17ம்
தேதி வந்தவர், திடீரென மாயமானார். உறவினர்கள் வீடுகளில் தேடியும்
கிடைக்கவில்லை. தந்தை ஆறுமுகம் புகாரின்படி, பங்களாப்புதுார்
போலீசார் தேடி வருகின்றனர்.
* பவானி அருகே மைலம்பாடி காட்டூரை
சேர்ந்த பெருமாள் மகள் நித்யா, 31; இவரின் கணவர் கொமராயனுாரை சேர்ந்த
கனகராஜ். தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவர்
ஐந்தாண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஒரு வாரத்துக்கு முன்,
காட்டூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தவர், அருகேயுள்ள
கோவிலுக்கு சென்றுள்ளார். பிறகு வீடு திரும்பவில்லை. தந்தை பெருமாள்
புகாரின்படி பவானி போலீசார் தேடி வருகின்றனர்.
