தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/யூனியன் அலுவலகம் முற்றுகை; பி.டி.ஓ., விளக்கம்

யூனியன் அலுவலகம் முற்றுகை; பி.டி.ஓ., விளக்கம்

யூனியன் அலுவலகம் முற்றுகை; பி.டி.ஓ., விளக்கம்


ADDED : அக் 31, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2026 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை:எக்கட்டாம்பாளையம் பஞ்.,ல் பணிபுரியும், நுாறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள், வருகைப்பதிவு செய்யவில்லை மற்றும் பணித்தள பொறுப்பாளரை நீக்கியதை கண்டித்தும், சென்னிமலை யூனியன் அலுவலகத்தை, நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் சென்னிமலை யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்

சக்திவேல், விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

எக்கட்டாம்பாளையம் ஊராட்சி பணித்தள பொறுப்பாளர் பூங்கொடி, கடந்த காலங்களில் மகளிர் திட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்தபோது நிதி முறைகேடு தொடர்பாக, பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த ஓராண்டாக நுாறுநாள் வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளராக பணிபுரிந்த நிலையில், அவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார் வந்ததால், அவரை பொறுப்பாளராக செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இதனால் நேற்று முன்தினம் பணிக்கு வந்த, 20 நபர்களை தவிர பணிக்கு வராதவர்களை அழைத்து வந்து, யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட செய்துள்ளார். அலுவலக பணியாளரை மிரட்டி, ஒருமையில் திட்டி அநாகரீகமாக நடந்து, அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல மறுத்துள்ளார்.

மேலும் அன்றைய தினம் பணித்தளத்துக்கு வேலைக்கு வந்த பயனாளிகளிடம், யூனியன் அலுவலகத்தில் இருந்து சென்றவரை, அங்கிருந்தோர் புகைப்படம் எடுக்கவிடாமல் தடுத்துள்ளநர். வருகைப்பதிவு உரிய நேரத்தில் செய்யப்படவில்லை என்பதும் உண்மைக்கு மாறானது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us