ADDED : டிச 01, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகள் மாயம்: தாய் புகார்
ஈரோடு, டிச. 1-
ஈரோடு, நாராயணவலசு, டவர் லைன் காலனி சிவக்குமார் மனைவி சுதா, 30; கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து, அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசிக்கிறார். அடிக்கடி வெளியூர் சென்று தங்கி வேலை செய்த பின் வீட்டுக்கு வருவார். கடந்த அக்.,18ல் வெளியூருக்கு சென்றவர் ஒரு வாரம் மொபைல்போனில் பேசினார். அதன் பின் பேசவில்லை. மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாயமான மகளை கண்டுபிடித்து தருமாறு, சுதாவின் தாய் விஜயலட்சுமி, வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்துள்ளார்.

