ADDED : ஆக 05, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, கருமாண்டாம்பாளையம், கரூர் மெயின் ரோட்டை சேர்ந்த பழ வியாபாரி சேகர். இவரின் மகள், திருச்செங்கோட்டில் ஒரு கல்லுாரியில் படிக்கிறார். கடந்த, 2ம் தேதி மதியம் வீட்டில் இருந்து மாயமானார்.
மறுநாள் காலை திருச்செங்கோடு, சுள்ளிமேட்டை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் மொபைல்போனில் இருந்து சேகருக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய அவரது மகள், நான் நலமாக இருக்கிறேன். என்னை தேட வேண்டாம் என்று கூறி இணைப்பை துண்டிதுள்ளார். அதன் பிறகு அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் மகளை கண்டுபிடித்து தருமாறு அவரது தாய் ரேவதி அளித்த புகாரின்படி, மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.