ADDED : ஏப் 13, 2026 03:22 AM
அ நிறம் | அளவு
பவானி:அம்மாபேட்டை அருகே பி.கே.புதுாரை சேர்ந்தவர் லட்சுமி, 50; கூலி தொழிலாளி. இவரின் மகள் சவுந்தர்யா, 28; மகளிர் சுய உதவி குழு தலைவியாக உள்ளார்.
குழுவில் கடன்தொகையை வசூலித்து, கண்ணப்பள்ளி கூட்டுறவு சொசைட்டியில், சவுந்தர்யா கட்டி வந்தார். இரண்டு மாதமாக பணத்தை கட்டாததால் கூட்டுறவு சொசைட்டி அலுவலர்கள் வந்து கேட்டுள்ளனர். இந்நிலையில் சவுந்தர்யா மாயமாகி விட்டார். லட்சுமி புகாரின்படி அம்மாபேட்டை அம்மாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
