ADDED : மே 03, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம் : டி.ஜி.புதுாரை அடுத்த பெரிய கொடிவேரியை சேர்ந்த கூலி தொழிலாளி பழனிச்சாமி.
இவருக்கு, 18, 15 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இருவரும் கடந்த, ௨9ம் தேதி மாலை அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் சத்தி பூ மார்க்கெட்டுக்கு சென்றனர். அந்த பெண்ணிடம் திருப்பூரில் உள்ள சித்தப்பாவை பார்க்க செல்வதாக கூறிவிட்டு பஸ் ஏறி சென்று விட்டனர். இதுகுறித்து பழனிச்சாமியிடம் அந்த பெண் தெரிவித்தார். திருப்பூரில் உள்ள தம்பியை பழனிச்சாமியை மொபைல்போனில் தொடர்பு கொண்டபோது, மகள்கள் வராதது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்படி சத்தி போலீசார், சிறுமிகளை தேடி வருகின்றனர்.