/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நந்தா நிறுவனத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
/
நந்தா நிறுவனத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
நந்தா நிறுவனத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
நந்தா நிறுவனத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
ADDED : நவ 28, 2024 01:25 AM
நந்தா நிறுவனத்தில் பெண்களுக்கு
எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
ஈரோடு, நவ. 28-
நந்தா கல்வி நிறுவனங்களின், பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில், மவுனத்தை கலைத்து வன்முறைக்கு முடிவு கட்டுங்கள் என்ற தலைப்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
ஈரோடு செங்கோட்டையன் நிறுவனத்தின் பயிற்சி பட்டைய கணக்காளர் ரம்யா சிறப்பாளராக கலந்து கொண்டார். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமையில், அங்கத்தினர் பானுமதி சண்முகன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் செல்வி விதுஷாமூர்த்தி வரவேற்றார்.நந்தா கல்வி நிறுவனங்களின், பெண்கள் மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர்களான உறுப்பு கல்லுாரிகளின் பெண் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் ரம்யா,' விசாகா கமிட்டி, நிர்பயா வழக்கு, குழந்தைகள் திருமணம் மற்றும் காவலன் செயலி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மாணவிகளிடம் எடுத்துரைத்தார். மேலும் ஒரு பெண் தான் கற்ற கல்வியின் உதவியுடன், குடும்பம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் தனது பங்கை பற்றியும் முழுமையாக தெரிந்து கொண்டு, பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி கொள்ளும் பட்சத்தில், தனக்கு எதிராக துாண்டப்படும் வன்மத்தில் இருந்து விடுபட வழி வகுக்கும்' என்றார்.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் ஆகியோர் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.