தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பகலில் நோட்டமிடும் நபர்கள் பு.புளியம்பட்டியில் மக்கள் பீதி

பகலில் நோட்டமிடும் நபர்கள் பு.புளியம்பட்டியில் மக்கள் பீதி

பகலில் நோட்டமிடும் நபர்கள் பு.புளியம்பட்டியில் மக்கள் பீதி


ADDED : நவ 23, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

கடந்த சில நாட்களாக புளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட நம்பியூர் சாலை, மாரியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதியில், பகல் நேரத்தில் மர்ம நபர்கள் சுற்றி திரிவதாக, மக்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.

வீடுகளை போட்டோ எடுக்கும் நபர்களை கேட்டால், நகராட்சியில் இருந்து வருகிறோம். வீடுகளை கணக்கு எடுக்கிறோம் என கூறுவதாகவும், அலுவலகத்துக்கு போன் செய்து கேட்டால் அப்படி எந்த கணக்கெடுப்பும் நடக்கவில்லை என கூறுகின்றனர். இதனால் வீடுகளில் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.

நகராட்சியை ஒட்டிய கிராமப்புற தோட்டத்து வீடுகளில் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர். மக்களின் அச்சத்தை போக்க, புன்செய் புளியம்பட்டி நகர பகுதியில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us