/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாய்க்காலில் செத்து மிதந்த மீன்கள்
/
வாய்க்காலில் செத்து மிதந்த மீன்கள்
ADDED : மே 15, 2025 01:35 AM
ஈரோடு ;ஈரோடு காளிங்கராயன் வாய்க்கால் வறண்டு வரும் சூழலில், ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காளிங்கராயன் வாய்க்காலில், பாசனத்துக்காக விடப் பட்ட நீர், ஏப்., 30ல் நிறுத்தப்பட்டது. இதனால் காளிங்கராயன் வாய்க்காலில், படிப்படியாக நீரோட்டம் குறைந்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் செல்லும் வாய்க்காலில், நேற்று காலை ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.
இதனால் கடுமையான துர்நாற்றம் வீசியது. வயல்வெளிகளுக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள், விவசாயிகள், துர்நாற்றத்தால் சிரமத்துக்கு ஆளாகினர். மீன்கள் இறந்து ஓரிரு நாட்கள் இருக்க கூடும். நீரோட்டம் குறைந்ததால் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு, மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.