ADDED : ஜூலை 04, 2026 04:21 AM

அ நிறம் | அளவு
பவானி:மேட்டூர்
அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நெரிஞ்சிப்பேட்டை,
கோனேரிபட்டி நீர்மின் தேக்க பகுதியை கடந்து செல்கிறது.
இந்நிலையில்
நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் ற்றுக்கணக்கான மீன்கள் நேற்று
செத்து மிதந்தன. இதனால் துர்நாற்றம் வீசியதால் ஆற்றில் குளிக்க
வந்தவர்கள் முகம் சுளித்தபடி சென்றனர். அதேசமயம் செத்து மிதந்த
மீன்களை, பலர் பாத்திரத்தில் அள்ளிப்போட்டு எடுத்து சென்றனர்.
மீன்கள் இறப்புக்கு ஆற்றில் வீசப்பட்ட தோட்டாக்கள் காரணமா அல்லது வேறு
விவகாரமா என்பது குறித்து தெரியவில்லை.
