/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் ஆக்கிரமிப்பை அகற்ற இன்றுடன் கெடு நிறைவு
/
சென்னிமலையில் ஆக்கிரமிப்பை அகற்ற இன்றுடன் கெடு நிறைவு
சென்னிமலையில் ஆக்கிரமிப்பை அகற்ற இன்றுடன் கெடு நிறைவு
சென்னிமலையில் ஆக்கிரமிப்பை அகற்ற இன்றுடன் கெடு நிறைவு
ADDED : நவ 15, 2024 02:02 AM
சென்னிமலையில் ஆக்கிரமிப்பை
அகற்ற இன்றுடன் கெடு நிறைவு
சென்னிமலை, நவ. 15-
சென்னிமலையில் தினசரி மார்க்கெட் முதல் வடக்கு ராஜவீதி, கிழக்கு ராஜவீதி மற்றும் காங்கேயம் ரோடு வழியாக உப்பிலிபாளையம் ரோடு பிரிவு வரை, தெற்கு ராஜவீதி, மேற்கு ராஜவீதி வழியாக ஊத்துக்குளி ரோடு மேலப்பாளையம் வரை, சாலையோர ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தி, ஒரு மாதத்துக்கு முன் நோட்டீஸ் வழங்கினர். தீபாவளி பண்டிகையால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைக்காரர்கள் அவகாசம் கேட்டதால், நவ.,௧௫ம் தேதி வரை அனுமதித்தனர். இன்றுடன் அவகாசம் முடிவடையும் நிலையில், சென்னிமலை பஸ் ஸ்டாண்ட், தெற்கு ராஜவீதி மற்றும் மேற்கு ராஜவீதிகளில் நேற்றே சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இன்றுடன் கெடு முடியும் நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் நாளை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.