ADDED : ஜூன் 20, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சிக்கு சொந்தமான அப்துல் கனி ஜவுளி வணிக வளாகத்தில், உரிய
அனுமதியின்றி, 10 அட்டை கடைகளை கடைக்காரர்கள் வைத்திருந்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தும் அகற்றாததால், நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டது.இதில் கடைகளை அகற்ற உத்தரவு கிடைத்துள்ளது.
இதை தொடர்ந்து சம்பந்தபட்ட கடைக்காரர்களுக்கு நீதிமன்ற
உத்தரவின் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதில் வரும், 24ம் தேதிக்குள்
கடைகளை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
